Monday, January 23, 2012






மெத்தவும் மகிழ்வு கொண்டேன்




மெத்தவும் வருத்தம் கொண்டேன்
நான் உலகினில் பிறந்ததற்கே
உத்தமவாழ்க்கை வாழமும் முடியாமலே
மெத்தமும் வருத்தம் கொண்டேன்
சத்தியம் தவறாமல் தனி
பெரும் உண்மை கண்டு
புத்தியில் உறைய வைக்க
போதிய அவகாசம் இல்லை.
சித்திகள் பலவும் தந்து
எனைகாத்த உத்தம குருவே
உம்மை உணர்ந்து வாழ்வது
தான் எக்காலம் என்று
மெத்தவும் வருத்தம் கொண்டேன்
நான் உலகினில் பிறந்ததற்கே.



ஐந்து புலன்களாலும் அடைந்த
இன்ப துன்பங்கள் எல்லாம்
சாட்சியாய் வந்து நின்று
எனை காக்குமே தரணியிலே
மெத்தவும் வருத்தம் கொண்டேன்
நான் உலகினில் பிறந்ததற்கே.
ஆற்றிய கடமைகளை நான்
அண்ணார்ந்து பார்த்தது இல்லை
போற்றியே என்னைப் பேசி
குளிர்விப்பார் யாரும் இல்லை
மெத்தவும் வருத்தம் கொண்டேன்
நான் உலகினில் பிறந்ததற்கே.



புகழுதல் வேண்டாம் ஐயா
புலன்களும் இச்சை விட்டதுவே
நறுமணம் என நினைத்த
ஞால சுகங்களும் போனதைய்யா.
இனி பரம்பொருள் ஒன்றுதான்
ஞானத்தின் கடை நிலை
என நெஞ்சு உணர்ந்ததுவே
மெத்தவும் மகிழ்வு கொண்டேன்
நான் உலகினில் பிறந்ததற்கே.

No comments:

Post a Comment