சிவன் நாடியே எண்ணம் செல்லல்சிந்தாமல் சிதறாமல் எண்ணம்
சிவன் நாடி செல்லுதம்மா
ஐந்தாறு வருடம் போனால்
தத்துவம் விளங்கும் அம்மா.
பாசங்கள் உள் அளவும்
நெஞ்சம் பரிதவித்து ஏங்கிச்சம்மா.
ஞாலமும் விளங்காமலே அது
நடு வீதியில் நின்றதம்மா.
சோதனை வேதனைகளை அது
நித்தமும் சுமந்ததம்மா
குரு தந்த போதனையால்
புண்ணியம் இல்லையம்மா.
இன்று ஆரவாரம் இன்றி
அமைதியும் கிடைத்தம்மா.
கோடானகோடி வருடம் செய்த
தவம் தெரிந்ததம்மா
பொன்னாலே பூச் செய்து
புவியிலே வைத்தாலும்
உள்ளார்ந்து பார்க்கையில்
ஒன்றுமில்லை உணர்ந்ததம்மா.
களார்ந்த பூங்கொன்றை
மதிசூடிய சிவனை வந்து பற்றிக்கொண்டால்
சுகம் எனக் கொண்டதம்மா.
சிவன் நாடி செல்லுதம்மா
ஐந்தாறு வருடம் போனால்
தத்துவம் விளங்கும் அம்மா.
பாசங்கள் உள் அளவும்
நெஞ்சம் பரிதவித்து ஏங்கிச்சம்மா.
ஞாலமும் விளங்காமலே அது
நடு வீதியில் நின்றதம்மா.
சோதனை வேதனைகளை அது
நித்தமும் சுமந்ததம்மா
குரு தந்த போதனையால்
புண்ணியம் இல்லையம்மா.
இன்று ஆரவாரம் இன்றி
அமைதியும் கிடைத்தம்மா.
கோடானகோடி வருடம் செய்த
தவம் தெரிந்ததம்மா
பொன்னாலே பூச் செய்து
புவியிலே வைத்தாலும்
உள்ளார்ந்து பார்க்கையில்
ஒன்றுமில்லை உணர்ந்ததம்மா.
களார்ந்த பூங்கொன்றை
மதிசூடிய சிவனை வந்து பற்றிக்கொண்டால்
சுகம் எனக் கொண்டதம்மா.
No comments:
Post a Comment