அகர வரிசை குரு துதி
அம்பிகையின் அருள் படைத்தார் எங்கள் குருநாதன்
ஆக்கம் எல்லாம் தருபவரே எங்கள் குருநாதன்
இல்லம் அதை வாழ வைத்தார் எங்கள் குருநாதன்
ஈசன் பாதம் வணங்கச் செய்தார் எங்கள் குருநாதன்
உலகத்தை உணர வைத்தார் எங்கள் குருநாதன்
ஊரினையே வாழ வைத்தார் எங்கள் குருநாதன்
எம்மில் அன்பு கொண்டவர் எங்கள் குருநாதன்
ஏற்ற தாழ்வு அற்றவர் தான் எங்கள் குருநாதன்
ஐயங்கள் தீர்த்து வைத்தார் எங்கள் குருநாதன்
ஒழுக்கம் அதை புரிய வைத்தார் எங்கள் குருநாதன்
ஓய்வில்லாத உலகம் அதில் எங்கள் குருநாதன்
ஔடதமாய் ஆனவர் தான் எங்கள் குருநாதன்
கருணை தனை காட்டி எங்கள் குருநாதன்
ங போல வளைய வைத்தார் எங்கள் குருநாதன்
சத்தியத்தை அறிய வைத்தார் எங்கள் குருநாதன்
ஞயமுடனே உரைப்பவர் தான் எங்கள் குருநாதன்
ஞயமுடனே உரைப்பவர் தான் எங்கள் குருநாதன்
டம்ப வாழ்க்கை தவிர்க்கச்செய்தார் எங்கள் குருநாதன்
உண்மை தனை விளம்பி நின்றார் எங்கள் குருநாதன்
உண்மை தனை விளம்பி நின்றார் எங்கள் குருநாதன்
தரணிக்கே உழைப்பவர் தான் எங்கள் குருநாதன்
நல்லதையே செய்பவர் தான் எங்கள் குருநாதன்
நல்லதையே செய்பவர் தான் எங்கள் குருநாதன்
பரம் பொருளை அறிந்தவர் தான் எங்கள் குருநாதன்
மயக்கத்தை களைய வைத்தார் எங்கள் குருநாதன்
மயக்கத்தை களைய வைத்தார் எங்கள் குருநாதன்
யந்திரமாய் வாழ்ந்திடாமல் எங்கள் குருநாதன்
ரம்மியமாய் வாழ வைத்தார் எங்கள் குருநாதன்
ரம்மியமாய் வாழ வைத்தார் எங்கள் குருநாதன்
லயம் உடனே வாழ்வதற்கே எங்கள் குருநாதன்
வழியினையே காட்டி தந்தார் எங்கள் குருநாதன்
வழியினையே காட்டி தந்தார் எங்கள் குருநாதன்
பழமை தனை பேணிக்காத்தார் எங்கள் குருநாதன்
உள்ளம் அதை செப்பனிட்டார் எங்கள் குருநாதன்
உள்ளம் அதை செப்பனிட்டார் எங்கள் குருநாதன்
றம்ப என இருந்த வாழ்வை எங்கள் குருநாதன்
அன்பு மயமாக்கி விட்டார் எங்கள் குருநாதன்
அன்பு மயமாக்கி விட்டார் எங்கள் குருநாதன்

No comments:
Post a Comment