Friday, December 23, 2011





மானிடரை வாழ வைத்தல்

திருமால் இடத்தில் இல்லாமை
மாயவன் இடம் கண்டாள்
மயங்கியே தான் லக்ஷ்மியும்


மனம் மகிழ்ச்சி தரும்
வடிவழகன் மாயவன் இடம்
மோகம் தான் கொண்டாள்


கருணை கொண்ட கிருஷ்ணனும்
லக்ஷ்மி பக்தருக்கு வரம்
தரும் இயல் படைத்தார்


செல்வச் செழுமையுறு கிருஷ்ணனும்
நாராயணன் தான் என
மானிடர்க்கு புரிய வைத்தார்


கள்ளமில்லா மனதோடு கிருஷ்ணரை
அழகிய கோபியரும் அன்போடு
மதுர பாவனையில் வலம்வந்தார்


ராதையின் பிரேமை ராகத்திலும்
கோபியரின் அன்புச்செழுமையிலும்
கிருஷ்ணர் மானிடர்க்கு வாழ்வழித்தார்
.




No comments:

Post a Comment