எனதுரை
(அம்மாவின் உரை)
முதலில் என் உள்ளத்தில் உறுதுணையாய் நின்று அருள்பாலித்து வரும் எங்கள் குரு சுவாமி கெங்காதரணாந்தவின் மலர்பாதங்களை பணிந்து என் நன்றியினைதெரிவிப்பதோடு இந்த நூலுக்கு தமது ஆசியுரை வழங்கிய ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணாந்தா ஜி அவர்கட்கும் என் மனம் நிறைந்த நன்றியினை பணிவோடு தெரிவித்து கொளகிறேன். திருமலையில் எமக்கு எப்போதும் நல் உபதேசங்களை உவந்து கூறும் தொண்டர் காந்தி ஐயா வென அழைக்கும் கந்தையா ஆசிரியர் என்ற காந்தியியாவுக்கு எனது நூலுக்கு வாழ்த்துரை தந்த்மைக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த நூலுக்கு ஆசிரியை கலாபூஷணம் பாலேஸ்வரி நல்ரெட்ணசிங்கம் அவர்கள் முகவுரை தந்து கவிதை உலகிற்கு என்னை அறிமுக படுத்தியமைக்கு அன்பின் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.அடுத்ததாய் வெளியீட்டாளர் என்று கூறப்படினும் சிறுவயதில் இருந்து தாய் பிள்ளை போல் பழகிய என் அண்ணன் ராமச்சந்திரனின் நண்பர் சித்திஅமரசிங்கம் அவர்கட்கும் என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் நூலுக்கு வாழ்த்துரை ஆசியுரை முகவுரை வழங்கி என் மனதில் இடம் பிடித்து அன்பின் நன்றியை பெற்றவர்கள் எனது நூலை நூலாக கணினியில்
அச்சுகோத்து தந்தவர்களான விஜயா,யமுனா மேலும் இரு குழந்தைகள் இவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்கிறேன். திரு ஆனந்தராஜா என்பவர் எனக்கு உறவினராய் மட்டுமல்லாது என் சகோதரராய் நின்று இந்நூல் அச்சில் வர பெரிதும் உதவினர் அவருக்கும் என் நன்றியினை தெரிவிக்கிறேன் மேலும் இந்நூல் வெளியிட்ட அச்சகத்தார்உதவி செய்தோர் அனைவருக்கும் என்நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நூல் ஆசிரியை
திருமதி.ஞா.ஸ்ரீஸ்கந்தராஜா
No comments:
Post a Comment