Thursday, December 15, 2011

ஆசியுரை



நூலாசிரியர் திருமதி.ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களைப் பல ஆண்களாக நான் நன்கு அறிவேன்.அவரைக் காணும்போதெல்லாம் ஆத்மீக விடியங்களைப் பற்றியே பேசுவார். ஆத்மீக சம்பந்தமான இந்த நூலை அவர் எழுதத்தகுதி உடையவர்.



கடவுளை அறிந்து கடவுளை வழபட்டு கடவுளை அடைதலே மனிதப் பிறவியின் நோக்கம் என்ற யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் பெருமான் அருளியுள்ளார். இந்த நோக்கத்தை அடைய உதவும் நூல்களே முதன்மையான நூல்களாகும்.



இந்த நூல் ஆத்மீகவழிக்கு பெரிதும் உதவியாக உள்ளது.கடவுளுடைய சக்தி மேலானது என்றும் கடவுளை அடைவதற்கு எங்களை எவ்வாறு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆங்காங்கு எழுதப்பட்டுள்ளது.



நூலிலே நூற்றெட்டுப் பாடல்கள் உள்ளன. நூல் முழுவதையும் நான் படித்தேன். பேராசையினாலும் சுயநலத்தினாலும் சமூகம் கீழ்நிலை அடைந்திருப்பதை ஆசிரியர் நன்கறிந்து சமூகத்தை நலவழிப்படுத்த முயன்றுள்ளார்.



இளைஞர்கள் வழிதப்பிப்போய்க் கொண்டிருக்கிறார்கள் பெறறோரும் ஆசிரியர்களும் பெரியவர்களும் இளைஞர்களுக்குப் புத்திகூறுவதோடு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட வேண்டும். சமய நூல்களையும் படிக்க வைக்க வேண்டும்.



நூலாசிரியர் தனது சொந்த அனுபவங்களைக் குறிப்பிட்டு தான் எவ்விதம் கடவுள் பக்தியால் கடவுள் நமபிக்கையால் முன்னேறினேன் என்றும் எழுதியிருக்கிறார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று தாயுமா சுவாமிகள் அருளினார்.எல்லோறும் இன்பற்றிருக்கவே நூலாசிரியர் இதனை எழுதினார்.



இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க



ஆனந்தம்



திருகோணமலை பொ.கந்தையா



09- 01-2006 காந்திஆசிரியர்

No comments:

Post a Comment