Tuesday, December 20, 2011

லஷ்மி



செம்பவழ இதழழகு மங்கையவள் தங்கநிறம்
அன்புநிறை அருள்முகமும் கருணைதரு விழியழகும்
நாரயணன் நெஞ்சத்தை தங்குமிடமாய் கொண்டாள்.
நாரயணியென்று பத்தினியாம் பெயர் பூண்டாள்




பொங்கிய புன்னகை புவித்தோற்றம் காட்டிடுமே
மெல்லான நகையோடு மென்பாத சுவடெடுத்து
மேதினியில் வந்துவிட்டால் செல்வம் குவிந்திடும்
செந்தழிப்பும் மிகுந்திடும் ஐெகமும் துலங்கிடும்







பச்சை மரகதங்கள் மாணிக்க வைடூரியங்கள்
தங்கத்தால் ஆபரணம் முத்துமணி மோதிரங்கள்
தரணியெங்கும் வயல்வெளிகள் மாடமாளிகை எல்லாம்
இச்சையுடன் அருளினால் இனிதே தந்திடுவாள்.







மாடு கன்று எல்லாமே பட்டியாய் நின்றிடுமே
சந்தான விருத்தியும் தவறாது தந்திடுவாள்.
அத்தனைக்கும் பக்தியுடன் துதித்தே வணங்கிடுவோம்
அன்னையவளை துதித்தார்க்கு வறுமைதான் இல்லையே.


No comments:

Post a Comment