Tuesday, December 20, 2011



சரஸ்வதி



தாமரை பூவில் அமர்ந்திருப்பாள்
கருமத்தில் ஞானத்தை உவந்தளிப்பாள்.
மாணவர் தமக்கு கல்வியாய் நின்றே
வாழ்க்கையின் தேவைக்கு வழிவகுப்பாள்



சரஸ்வதி என்று புகழுவோருக்கு
தனிப்பெருந் தெய்வமாய் ஆகிநின்றாள்
பெருந்தவம் உடைய முனிவர்களும்
போற்றியே துதிசெய்வார் அன்றோ


கருணை கொண்டே மக்களிடம்
கலைகளாய் சாதனை புரிந்திடுவாள்
புலமையாய் நாமும் வரவே
மாதவம் என்ன செய்தோமோ.


பாடுமிசையில் வலம் வருவாள்
நாதங்களில் நலம் தருவாள்
போற்றியே அவளை துதிப்பார்க்கு
புத்தியாய் வாழவழி வகுப்பாள்.

No comments:

Post a Comment