Wednesday, December 21, 2011

சக்தி



அன்னையவள் பாதம் தொழுதே
அளப்பரிய வெற்றியினை ஈட்டிடுவோம்
எண்ணியதை எண்ணியவாறு முடிப்பதற்கு
ஏற்றமிகு சக்தியினை பெற்றிடுவோம்.



பாசமிகுவுலகை பரிந்து காக்கின்றாள்.
நேசமிகு நலனை தருகிறாள்
உள்ளத்தின் குமுறலை கூறிவிட்டால்
கள்ளமில்லா கருணையோடு வந்திடுவாள்



மூவுலகு தொழும் தேவியவள்
முந்துசிவன் நற்பெரும் மனைவியவள்
போற்றுகின்ற திருநாமம் பலவுண்டு
சால்புடனே அவளை வணங்கிடுவோம்.




No comments:

Post a Comment