அமுத மொழிஅழகான அழகான அமுத மொழி
அருளான அருளான மகேந்திர குப்தாவின்
சுவையான சுவையான நூலை
அயராமல் அயராமல் படிப்பதாலே
தொலைவான தொலைவான வானம் அதில்
கெதியாக கெதியாக பறப்பதேபோல
லயமாக லயமாக மனமே செல்லும்
உயர்வான உயர்வான எண்ணமெல்லாம்
ஒளியாக ஒளியாக சுடர் விடுவதால்
தளர்வான தளர்வான கர்மா
மெதுவாக மெதுவாக எம்மை விட்டு
அறியாது அறியாது களன்றுவிடும்
சுகமான சுகமான அனுபவங்கள்
இயல்பாக இயல்பாக எம்மைநாடும்
அறியாத அறியாத இன்பம் வந்து
ஆறாத ஆறாத பரவசமாக்கும்
கனிவான கனிவான அமுத மொழி
ஒழுங்காக ஒழுங்காக படிக்கவே
இசைவாக இசைவாக சூழும் தானே.
No comments:
Post a Comment