Monday, December 26, 2011

பக்தி

க்தியினால் நித்தமும் வழிபட்டு
பொற்பாதம் தொழுதிட துணை ஆவாயே
நற்தமிழ் இசையாலே நற்சிந்தை ஓடு
நலம் கெடாது நயமுடன் பாடிடுவோம்



சத்தியம் தவறாமல் உழைத்து
புவிதனில் புனிதமாய் வாழ்ந்திடுவோமே
உத்தம வாழ்வில் உதவிட கரங்களுண்டு
உதவிகள் நாமும் செய்வோமே


வித்தகா உனையேற்றேன்
நான் விரும்பிய கவி பாடி
உன் தத்துவம் கூறிட தந்திடு வரந்தானே
எச்செயல் செய்யினும் உன் அதிகாரம் தந்து
மக்கள் புரிந்திட செய்வாயே


புண்ணியமான செய்கையினால் பூமியில்
நல்லதைச் செய்திட அருள்வாயே
நற்செயலால் வந்த ஞாலத்திலே
மோனமே நிலைத்திட வரந்தருவாயே

No comments:

Post a Comment