Sunday, December 25, 2011





பிரம்மம்

சிவ
சிவ சிவ சிவ எனப்பாடு
சிவன் தரும் வழியினை நீதேடு
உள்ளே இருப்பது ஓர் இருப்பிடம்
அதை நீ தெரிந்து கொள்ளு

சிவ சிவ
சத்தத்தின் உள்ளே சதாசிவம் கண்டார்
தலையாய ஞானம் அதை புரிந்திடுவார்
தத்துவமசி புரிந்து விட்டால்
தரணியில் அதற்கு நிகர் இல்லையே
சிவ சிவ
உத்தமா நீ அதை போற்றுகின்றாயே
கள்ளம் இன்றி பாடுவதால் உன்
கர்வம் எல்லாம் பறந்து போகும்
கவலை எல்லாம் பறந்தே போயிடுமே
சிவ சிவ
உனக்குள் இருப்பது சிவன்
என்று அறிந்து கொள்வாயே
மௌனம் வந்து சேர்ந்திடுமே
சிவ சிவ சிவ சிவ எனப்பாடு
சிவ சிவ

No comments:

Post a Comment