முருகன்
முத்தமிழ் வாசா சக்திபாலா
கைதொழ வந்தேன் ஐயா
புத்தியில் புதுமைகள் செய்திடு
புண்ணியா மனதினில் வைத்தேன்
கைதொழ வந்தேன் ஐயா
புத்தியில் புதுமைகள் செய்திடு
புண்ணியா மனதினில் வைத்தேன்
எத்துனை துயரும் போதினிலும்
சக்தியை தந்து நீ
தரணியில் எனை காத்திடுவாய்
வித்தகா உனை விரும்பினேன்
சக்தியை தந்து நீ
தரணியில் எனை காத்திடுவாய்
வித்தகா உனை விரும்பினேன்
கற்றதை கவிதையாய் நானும்
நித்தமும் இசை பாடவே
வைத்திடும் வழியினைக் காட்டிடு
அழகிய மயிலினில் வந்திடு
நித்தமும் இசை பாடவே
வைத்திடும் வழியினைக் காட்டிடு
அழகிய மயிலினில் வந்திடு
அன்பில் மயங்கியே யான்
அருமையாய் உனைப் பார்த்திடவே
நீ எத்தனை வரம் தந்தாய்
அத்தனையும் அடியேனை காப்பதற்கே
அருமையாய் உனைப் பார்த்திடவே
நீ எத்தனை வரம் தந்தாய்
அத்தனையும் அடியேனை காப்பதற்கே
பொற் பாதம் வணங்கினேன்
ஏற்று அருள்வீர் ஐயா
சிந்தையே கலங்காது சிவமாகிட
வரம் தந்திடு சிவபாலா
ஏற்று அருள்வீர் ஐயா
சிந்தையே கலங்காது சிவமாகிட
வரம் தந்திடு சிவபாலா
No comments:
Post a Comment