
இப்பாடல் கௌரி காப்பு அன்று வீட்டில் வேப்பம் இலை மணம் கமழும் போது வந்து சேர்ந்தது.
கௌரி காப்பு அம்பாளின் பாடல்
அகிலாண்ட நாயகியே
அன்பர் குறை தீர்ப்பவளே
ஆனந்தமாக நீயும் வா வா வா
அன்பர் குறை தீர்ப்பவளே
ஆனந்தமாக நீயும் வா வா வா
காஞ்சிபுர பட்டு உடுத்து
கைநிறைய வளை குலுங்க
ஆனந்தமாக நீயும் வா வா வா
கண்ணிறைந்த தெய்வம் நீயே
கருணை காட்டும் அன்புத்தாயே
ஆனந்தமாக நீயும் வா வா வா
திருமலை வாழ் காளிகையே
திவ்விய உருவ உத்தமியே
ஆனந்தமாக நீயும் வா வா வா
சிம்மவாகனம் உடையவளே எழில்
சின்மய சொரூபி நீயே
ஆனந்தமாக நீயும் வா வா வா
இதய தாகம் தீர்ப்பவளே
இமய மலையில் வாழ்பவளே
ஆனந்தமாக நீயும் வா வா வா
வல்லமையை தாராயோ அருள்
மான்பு மிகு சௌந்தரியே
ஆனந்தமாக நீயும் வா வா வா
இன்பமயம் இன்பமயம் எல்லாமே
இன்பமயம் இன்பத்தின் சிகரமே
ஆனந்தமாக நீயும் வா வா வா
No comments:
Post a Comment