Tuesday, January 3, 2012

போதும் என்ற மனம்

ர்வமும் பணியும் ஓய்ந்தனவே
மாலையில் காக்கை சென்று
கூட்டினில் உறைவது போல்
நெஞ்ஞம் தன்னிருப்பிடம்அடைந்ததுவே

பொங்கும் ஆனந்ததிற்கு அளவில்லை
புரிகின்ற நற்செயல்கள் எதுவுமில்லை
விருதுகள் கேளிக்கைகள் ஒன்றுமில்லை
சும்மா இருந்து சுகம் காண்கிறேன்

திருமுறைகள் அங்கு படிப்பதில்லை
திருவிழாக்கள் முறையே செய்வதில்லை
காற்றில் புரளும் சருகாக
உடலும் எண்ணமின்றிச் செல்கிறதே

தனித்துவம் அதற்கு இருப்பதில்லை
தரணியில் சலிப்புக்கள் எதுவுமில்லை
பேச்சுக்கள் பேசுவதில் சுகமில்லை
பொல்லாத சுமை ஒன்றுமில்லை

காண்கின்ற காட்சிகள் பார்ப்பதொழிய
கருத்தினில் போய் சேர்வதில்லை
போதுமென்ற மனத்துடன் வாழ்ந்தால்
புவியில் எல்லாம் கிடைத்திடுமே

No comments:

Post a Comment