Sunday, January 1, 2012










ஆத்ம சக்தி

ஆத்மீகசக்தி என்றும் அளப்பரியதாகும்
பார்க்குமிடம் எங்கும் திருச்சொரூபமாகும்
கேட்குமொழியெல்லாம் ஈசன்மொழியாகும்
தூக்கின்ற பாரம் எனறும்
எம்பாரம் இல்லைப் பெண்ணே
ஞாலத்தில் இதை உணர்ந்தால்
நலமிகு ஆகும் அன்றோ
எங்கும் நிறைந்தாய் இறைவா
இதயத்தில் உனை வைத்தேன்


பொங்கும் அலைகள் போன்ற
கவலைகளை துடைத்தே எறிந்தாயே
தங்குகின்ற வேலை தரணியில்
வந்ததால் வந்து நின்றேன்
கைகூப்பி வணங்கி கர்மாவை
இறை அருளால் போக்குவேன்


மெய்யாக சொன்னால் அதுவும்
உன் செயல் அன்றோ
பொய்யான வாழ்க்கையில் போகும்
இடம் எங்கும் இல்லை
எல்லாமே உன்னிடம் தான்
உன்னையன்றி அறிவார் யார்


தப்பான எண்ணங்கள் மனத்திற்கு
தந்திடாதே அப்பாலே அதுவுமே
கர்மாவாய் ஆகும் அன்றோ
போதுமே இனி நான் பொய்வேடம் போட்டது
சாருவேன் இருப்பிடம் நாடி
கூறுவேன் இதுவும் உன்செயலே என்றே

No comments:

Post a Comment