Friday, December 30, 2011



சுபபோகம்

கலைஞானம் உருவான தனித்தெய்வமே
இக சுபபோகம் எனக்கில்லை உருவாக்கினாய்
அதனாலே நான் உன்னை

துயராக தினம் நாடினேன்
தெருஞானம் போவதற்கு
உய் வழி தேடினேன்

உயர் ஞானம் தந்து
நீ விளங்க வைத்தாய்
தவ ஞானம் பெறுவதற்கு


தினம் கை ஏந்தினேன்
அருள் ஞானம் தந்தே
எனை ஆண்டு கொண்டாய்


சிவ பாதம் தனைக்காட்டி
என்னை சிறக்க வைத்தாய்
சிவநேய செல்வன் ஆக


எனக்கு வழியும் தந்தாய்
சிவபோதம் தனை தந்து
நீ என்னை ஊக்குவித்தே


சிவயோக நிலைதன்னை காட்டினாயே
சிவன் நாடிச் செல்ல
வழி செய்தே விட்டாய்
சுபபோகம் சுபபோகம் சுபபோகமே.




No comments:

Post a Comment