ராஜ யோகம்
பிரமம் முகூர்த்தம் அதில் எழந்திடுவார்
அவர் தம் காலைக் கடன்களை
சடுதியில் செய்தே முடித்து இடுவார்
தோய்த்து உலர்ந்த காவி வஸ்திரம்
தன்னை புனைந்தே ஆசனத்தில் இருந்து
கையிலே ருத்திராட்சம் மாலை ஏந்தி
ஓங்கார சொரூபி பிரணவனை துதித்து
குரு உபதேச மந்திரமதனை செப்பியே
ஒருமித்த மனத்தோடு இருந்திடுவார்
தியானம் அது நிலைத்திடும் பொழுதினிலே
ஆதாரசக்தி வழி குண்டலனி கிளம்பி
ஏழாம் இடமாம் சகஸ்திரம் அதனை
அடையும் முன் அற்புதக் காட்சிகள்
பலவற்றை தாண்டியே யோகி தானும்
தத்துவமசி என்பதனை தான் உணர்ந்து
முத்தியடையும் முது நிலையும் எய்துவரே.
அவர் தம் காலைக் கடன்களை
சடுதியில் செய்தே முடித்து இடுவார்
தோய்த்து உலர்ந்த காவி வஸ்திரம்
தன்னை புனைந்தே ஆசனத்தில் இருந்து
கையிலே ருத்திராட்சம் மாலை ஏந்தி
ஓங்கார சொரூபி பிரணவனை துதித்து
குரு உபதேச மந்திரமதனை செப்பியே
ஒருமித்த மனத்தோடு இருந்திடுவார்
தியானம் அது நிலைத்திடும் பொழுதினிலே
ஆதாரசக்தி வழி குண்டலனி கிளம்பி
ஏழாம் இடமாம் சகஸ்திரம் அதனை
அடையும் முன் அற்புதக் காட்சிகள்
பலவற்றை தாண்டியே யோகி தானும்
தத்துவமசி என்பதனை தான் உணர்ந்து
முத்தியடையும் முது நிலையும் எய்துவரே.
No comments:
Post a Comment