Thursday, January 12, 2012

இறை சிந்தனை


விடுகின்ற மூச்சில் உன் மலர்பாத
நினைவுகள் தொடராக
வரவேண்டும்.
வருகின்ற எண்ணம் சுவையாக தேங்கி
பக்தியின் கவியாக
வரவேண்டும்.
பருகினற சுவையில் கவியின்பம் என்றுமே
தானது அநுபூதியாக
வரவேண்டும்.
சுடுகின்ற வினைபோக என்றுமே நான்
தினமுமே கவிபாடி
வரவேண்டும்.
அரிதாக அரிதாக வரும் உன்
நினைவுகள் பெரிதாகி
வரவேண்டும்.
இருக்கின்ற போதும் நடக்கின்ற போதும்
உன் நினைவாய் இருந்து
வரவேண்டும்.
துயில்கின்ற போதும் விழிகின்ற போதும்
திருகாட்சியே கண்டு
வரவேண்டும்.
உன் சான்நித்தியம் எங்குமே நிறைந்திருக்க
நீயும் வரம்தர
வரவேண்டும்.
இனிதான நினைவில் இதமான அன்பில்
என்னையே மறந்து
வரவேண்டும்.
விடுகின்ற மூச்சில் உன் மலர்பாத
நினைவுகள் தொடராக வரவேண்டும்.

No comments:

Post a Comment