குரு தரிசனமே வாழ்க்கைக்கு நலமே
குரு தரிசனமே வாழ்க்கை்கு நலமே
கள்ளம் இல்லாமலே நல்லதை கற்பதற்கும்
கனிவுடன் மக்கள் துயரினைக் களைவதற்கும்
அல்லல் நிறைந்த மாய உலகிலே
இனிய நல்லோர் சேர்க்கை சேர்வதற்கும்
(குரு தரிசனமே)
பாரினில் நாமே சீலமாய் வாழவும்
ஒழுக்க நெறி ஞானம் சேர்ந்திடவும்
மேலோர் கீழோர் என்பது இன்றி
தம் தவத்தினால் தாம் உயர்நதிடவே
(குரு தரிசனமே)
திண்ணிய வினைகள் தீர்ந்திடும் அதனால்
செல்லும் வாழ்க்கை பாதை தெளிவுறுமே
புண்ணிய பாவங்கள் என்றே நாம்
பகுத்து பார்த்திட வழி பிறந்திடுமே
(குரு தரிசனமே)
மனதிடையே ஒளி பிறந்து வரும்
சோர்வில்லாத நிலை தான் தோன்றிடுமே
அகத்தின் வாயிலால் கிடைத்த நிலையால்
சரீரம் என்றும் புத்துணர்வு எய்திடுமே

No comments:
Post a Comment