Monday, April 30, 2012

                         

            சரணாகதி வணக்கம்
இன்று   (26.12.2004) கடல் பொங்கியது இறைவன் திருவருளால் யாவும் காப்பாற்றப்படல் வேண்டும் திருகோணமலை.மட்டக்களப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாய் கேள்வி.தற்போது மணி கிட்டதட்ட 1.30க்குள் இருக்கும் ஊரில் மின்சாரம் நிற்பாட்டபட்டபடியால் செய்திகள் கேட்க முடியவில்லை.திரும்பவும் அலைகள் வந்து விடக்கூடும்.நாங்கள் இருப்பது துறைமுக வீதியை ஒட்டிய அஞ்சல் அலுவக வீதி.எனது கால் காரணமாய் ஓடமுடியாத நிலையில் தம்பி ஜோதி வீடு (மாடி வீடு) மேல் மாடி பூ ட்டி இருப்பதால் மாடி ஏறும் நடை பாதையில் இருந்து இதை எழுதுகிறேன்.
இறைவன் திருவருளே
எங்கும் நடைபெறுமே
அவன் மாட்சிமை
தன்னில் வெளியீடுகள்
தன்னை யாரும்
அறிந்திலரே பாங்குடன்
செய்யும் வேலைகள்
பயனை யாரோ
ஏற்றிடுவார் உலகம்
அவன் படைப்பு
அதில் தோன்றிய
உயிர்கள் அவன்
உடைமை திருக்கரம்
நீட்டி காத்திடுவானே
தில்லை அம்பல
நடராஜன் தானே.
ஆடும் ஆட்டங்கள்
அவனது தொழில்கள்
அன்றோ ஓய்வின்றி
அவனும் காத்திடும்
போது மக்களின்
நலனும் கருதுவான்
தானே பாயும்
கடல் நீரினை தடுத்து
மக்களை காத்தருள்வாய்
வீரியம் உனதே
ஐயனே நான்
வேறு என்ன
கூறி இருந்திடுவேன்
பாடியே பரவி
துதி செய்கின்றேன்
ஐயா மக்களை
நீயும் காத்திடுவாயே
ஆடிய பாதம் உனதே
ஐயா உரிமையில்
யானும் வேண்டுகின்றேன்
காத்திடுவீர் ஐயா
காத்திடுவீரே இங்குள்ள
மக்களை காத்திடுவீர். 

Tuesday, April 24, 2012



நிலையாமை
ஓடுகின்ற வாழ்க்கையில்
உவந்து நிற்கும்
மககளே பாடுகின்ற
பாட்டைக் கொஞ்சம்
காது கொடுத்து
கேண்மின்காள் ஆடுகின்ற
பம்பரம் ஆடிஆடி
ஆடியே பாதையில்
விலகியே செல்லினும்
ஓடுகின்ற ஓட்டமது
முடிந்து விட்டால்
சாய்ந்து நிற்கும்
வேளையும் வந்திடும்
தன்னாலே.பாரும்
பாரும் பாருமே
மக்கள் துயரைப்பாருமே
உறவுகளை பிரிந்து
நின்று ஏங்குவது
காண்பீரே.ஏக்கம்
என்பது தனியவே
பாசமதை விட்டெறிவீர்
பாசம் என்பது
ஏதடா பச்சை
மரம் தானடா
காய்ந்து காய்ந்து
காய்ந்து போனால்
மிஞ்சி நிற்பது
ஏதடா பாதகங்கள்
செய்திடாமல் பாதை
தன்னில் வழுக்கிடாமல்
ஓதுகின்ற பாட்டையே
ஓதியே வாருமேன்
உண்மை உமக்கு
தெரியுமே லாலி
லாலி லாலி
என்று ஆடிக்
கொண்ட பின்னரும்
போடி போடி
போடி என்று
போக்கிடம் தேடுறீர்
அதுவும் இல்லை
இதுவும் இல்லை
அந்தரத்தில் நின்றேதான்
பவளக்குன்று போன்ற
இந்த தேகம்
தொலைத்த பின்னரே
மிஞ்சுவது என்னவோ
மேவி நின்று
பாருமே. அந்த
நாம ஈஸ்வரன்
அகத்திலுள்ள ஈஸ்வரன்
எந்த நாமம்
சொல்லினும் வந்துதான்
பார்ப்பானே சுற்று
சுற்று சுற்றென்று
சுழலுகின்ற உலகத்தை
விட்டு நாமல்
சென்றிட முடியுமோ
ஜகத்தீரே அன்று
போன ஜென்மங்கள்
இன்று வந்து
சேருது நின்று
போன உறவினை
ஆட்டியே பெருக்குது
ஊரும் வேணாம்
உறவும் வேணாம்
உலகத்தை பாருமே
நாளை நமக்கு
வேளை வந்தால்
போக்கிடம் எங்கடா
உள்ளிருந்து பார்க்கினும்
உற்றவாறு நோக்கினும்
நற்தவம் புரிந்ததை
நாண்மறை செய்யுமோ
விட்டில்பூச்சி போல
நீர் மயங்கி
விழ போறிரோ
கட்டு இல்லா
வானத்தில் மிதந்து
செல்ல போறிரோ
தத்துவம் தெரிந்திட்டு
தரிசனம் காண்பீரோ
எண்ணங்கள் இன்றியே
வெறுமையாக இருந்திட்டால்
நீயும் இல்லை
நானும் இல்லை
காற்றுதான் மிஞ்சுமே.

Saturday, April 21, 2012

கௌதம புத்தர்
உலகமே உய்யவென்று
இறைவனும் கருத்தில்
கொண்டு மகிதலம்
செழிப்புற புத்தரை
அனுப்பினாரே. அரசனாய்
பிறந்த செம்மல்
சித்தார்த்தன் எனும்
நாமம் சூடி
பெருமையாய் வளர்ந்தே
யசோதை எனும்
மங்கை தனை
மணந்தார். நாட்டையே
செம்மையாக ஆண்டு
வந்தே ராகுலன்
என்ற மைந்தன்
தன்னையே பெற்றார்
தானே.மூவித
காட்சி கண்டார்
முடிவில்லா துயரம்
கொண்டார் நோயுடை
மனிதன் பாதையில்
செல்லக் கண்டார்
முதுமை கொண்ட
வயோதிபர் தம்மை
கண்டார்.மரணம்
ஏய்திய உடலை
கண்டார்.இதனால்
மனம் மிக
வருந்தினாரே
துயருறு
காட்சி கண்டு
சித்தார்த்தன் துறவியானார்.
புத்தர் என
நாமம் கொண்டே
மனித குழாமிற்கு
புகன்றார் ஞானம்
உலகமே நிலையானதல்ல
மரணம் பின்
வருவது பற்றி
கவலையே வேண்டாம்
என்றார் தர்மமே
தலையாயது என்று
மக்களை வேண்டி
நின்றார்.தர்மத்தின்
துணை கண்டார்
தக்க வழி
கண்டாரே இறுதியும்
உறுதியுமாய் இதை
நாம் செய்வோமாகில்
கவலையே வேண்டாம்
வாழ்வில் உயர்
நிலை அடைவோம் தானே
புத்தர்தம் வாழ்வு
நமக்கு தருமமேசெய்
என்றே போதிக்கும்
போதனை கொண்டு
உலகில் நாம்
வாழ்வோம் தானே.

Monday, April 16, 2012

பாசத்தின் விளைவு

எனது மகள் திருமணமாகி கனடா செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்தது அவவை கூட்டிச் சென்று விமான நிலையத்தில் ஏற்றிய பின் மனம் வெகுவாய் வேதனைப்பட்டது.இந்தகவிதை எழுதிய பின் வேதனை தீர்ந்து மனம் தன் நிலைப்பாட்டில் நின்றது இதோ இந்த கவிதை.
அழுதாலும் விழுந்தாலும்
நிலை ஒன்றுதான்
அடித்தாலும் உதைத்தாலும்
வலி ஒன்றுதான்
இறை வாசல்
நின்றாலே மனம்
தேறுமோ இது
பாசம் என்றுணர்ந்து
தடை போடுமா
ஞானத்தின் முதற்
படியே இதுவே
தானோ கானத்தில்
எனை மறக்க
சுகம் கேட்குதோ
ஊள்ளொழியை பார்த்து
நிற்க வகைசெய்யுதோ
உணர்வினை நான்
உன்னிடத்தில் தந்தேன்
அல்லோ எனக்குள்ளே
இருக்கின்ற இறைவன்தானே
என்னுள்ளே இருந்திட்டு
அருள் கூட்டட்டும்
சுமையாக என்
மனம் எண்ணாமலே
சுவையாக அசைபோட
வழி செய்யட்டும்
தரணிக்கே உனது
ஆசி தருவாய்
நீயே தவிப்போர்கள்
தனை பார்த்து
தாங்கி கொள்ளு
மனதாலும் நினைவாலும்
உன் நினைவுதான்
மென்மேலும் தொடர்கின்ற
நிலை வேண்டுமே
வானளவு உயரத்தில்
நிற்கும் அந்த
இறை அருளால்
உள்ளொளியே பெருகும்தானே
எனக்குள்ளே இருக்கும்
அந்த உள்ளொளியால்
எல்லாமே ஆறுதல்கள்
வந்தே சேரும்.

Tuesday, April 10, 2012



தாய் குலம்

6.12.2006 இன்று என் அன்னையின் பிறந்ததினம் கவிதை எழுதுகையில் திகதியை கவனிக்கவில்லை.எழுதிய பின்னர் தான் என் அன்னையின் பிறந்ததினம் எனக் கண்டேன். இக்கவிதையை அன்னைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
தாய்க்குலமே தாய்க்குலமே
தரணிக்கு உயிர்
கொடுத்தவளே அன்பு
தனை மதிப்பவளே
தியாகத்தின் உறைவிடமே
உன்னைக் கொடுத்து
வாழ்கிறாய் உலகம்
தன்னை ஆள்கின்றாய்
நல்ல நல்ல
பிரஜைகளை தந்திடுவாய்
மாண்புறவே மக்களை
நீ வளர்த்திடுவாய்
பாரினிலே மழலைகளின்
வாழ்க்கை தொடக்கம்
உனது கையில்
மனித இன
முதற் கல்வி
போதனையும் உனது
அன்றோ தொட்டினிலே
பழக்கங்கள் சுடுகாடு
வரை அதனாலே
குழந்தைகளை பக்குவமாய்
வளர்த்திடுவாய் சிறுவர்கள்
தம் குணத்தாலே
பிழை அதனை
செய்திடினும் மன்னித்தே
காத்திடுவாய் மாண்புமிகு
கொண்டவளே வேதனையும்
சோதனையும் நீ
சுமந்து கொண்டே
பிள்ளை மனம்
வெதும்பாமல் பக்குவமாய்
வளர்த்திடுவாய் அதனாலே
இறைவன் தனக்காக
உன்னையே படைத்திட்டார்
புவிமேலே வாழும்
நாள் முழுவதும்
கடமை பட்டோம்
உன்னிடமே நாம்
பேறுகள் பெற்ற
எல்லாம் உன்
அன்பு ஆசியே
திருவருளின் ஆசியெல்லாம்
தாய்குலத்திற்கு நிலைத்திடுமே.

Tuesday, April 3, 2012

கீதைப் போதனை


கீதையை பகரவே
பார்த்தீபன் தன்னை
தேர்ந்தே எடுத்திட்ட
காரணம் என்னே?
தருமனே சான்றோன்
தருமமே தலையாய்
கொள்வார் எதையுமே
புத்தியில் உணர்ந்தே
செய்வார் தெய்வம்
தனை ஒப்பான்
அவனுக்கு உபதேசம்
செய்யவே தேவையில்லை.
பீமனோ வீரனாவான்
ஆற்றல் மிக்கான்
கோபமே வந்துவிட்டால்
தரணியே திரும்பியே
பாரான்.வெட்டியே
சாய்ப்பான்.மிருக
குணம் தனை
கொண்டோன் ஆவான்
அவன் தமக்கு
உபதேசம் செய்கில்
அவன் குணம்
தனை திருத்த
வேண்டும்.அதற்கு
நேரமோ இல்லை
போரது துவங்கும்
வேளை உள்ளதே
சொற்ப நேரம்
விஜயனே சொன்னதை
புரிந்து கொண்டு
செய்வதில் தீரனாவான்.
இரக்கமும் அன்பும்
உள்ளான்.யாரும்
பிழையது செய்வாராகில்
தண்டனை கொடுக்க
வல்லான்.கருமமே
கண்ணாய் நின்று
தன் கடன்
செய்வான் தானே
என்றே கண்ணன்
அர்ச்சுனன் தமக்கு
கீதையை உபதேசித்தார்.
இதனையே பெரியோரும்
இயம்பியே நின்றார்.

Sunday, April 1, 2012

சீரஞ்சீவிகள்

மாவலி பரசுராமன்
மார்க்கண்டன் அசுவத்தாமன்
மேவிய சுக்ரீவன்
விளம்பிய விபுஷணன்
அநுமன் எனஇவ்
எழுவரும் பூமியில்
சிரஞசீவிகளாக வாழ
வைத்தோர் யாரென
பார்போம் ஆகில்
சிவனாரில் ஆசி
பெற்றே சிரஞ்சீவியாய்
வாழ்வோர் மார்க்கண்டன்
அசுவத்தாமன்.ராமபிரான்
ஆசியாலே வந்தோர்
விபுஷணன் சுக்கிரீவனாகும்
நாராயணன் ஐந்தாம்
அவதார வாமனால்
வந்தோன் மாவலியாம்
லக்ஷ்மிதேவியாம் சீதாபிராட்டி
வியத்தகு கீர்த்தியான்
அநுமனை சிரஞ்சீவியாக
ஆக்கினார் தானே
ஜமதக்கினி முனிவர்
பரசுராமனுக்கு நல்ல
வரத்தினை ஈர்ந்தாரே
இப்படி எழுவரும்
மாநிலம் தன்னில்
சிரஞ்சீவிகளாக வாழ்கின்றாரே.