Saturday, March 31, 2012
பேர் எடுத்த தூதுவளை
முன்னம் ஓர்நாளில்
சேரமான் பெருமானுக்கு
தோன்றியதே ஓர் எண்ணம்
ஆகுதி கொடுக்கையில்
யாக குண்டமதனை
அமைத்து தீமூலம்
தேவர்கட்கு ஆகுதி
வழங்குதல் மரபாகும்.
ஆனாலும் சேரமான்
பெருமானோ சிவனாரை
நேரே அழைத்தே
ஆகுதியை கொடுக்கவே
விரும்பினான். அதற்கே
மந்திரியை அழைத்தே
தக்க யோசனை
சொல்என உரைத்தார்.
மந்திரியும் சிவனோடு
கதைத்து தன்
விருப்பங்கள் நிறைவேற்றும்
சுந்தரரால் முடியும்
என்றார்.சேரமான்
தானும் சென்றார்
சுந்தரர் ஊர்தேடி
மாறுவேடம் தனை
புனைந்தார்.மன்னர்
அக்கரையில் சுந்தரர்
இக்கரையில் நாட்கள்
ஒவ்வென்றும் தேர்ந்தே
எடுத்த தூதுவளையினை
சேர்ப்பித்தாரே பரவையாருக்கு
மன்னர் சேர்ப்பித்த
தூதுவளை சமையலுக்கு
மெல்லனவே சென்றதுவே
ஒருநாள் பச்சடி
அடுத்தநாள் குழம்பு
இப்படியே பலநாள்
தூதுவளை சமைத்தனர்.
நன்கு சமைத்து
வைத்த தூதுவளை
கறியை மௌனமாய்
உண்டார் சுந்தரரும்.
ஒருநாள் ஆறு
பெருக்கே எடுத்தே
கரைபுரண்டு ஓடியது.
மன்னனால் தூதுவளை
இலைதன்னைச் சமையலுக்கு
சேர்ப்பிக்க முடியவில்லை.
அந்நாள் சமையலுக்கு
தூதுவளை வரவில்லை.
மறுநாள் தானே
தூதுவளை பரவையார்
கைவந்து சேர்ந்ததுவே.
ஏன் நேற்று
வரவில்லை என்றே
வினாவை எழுப்பினார்
மன்னன் தானும்
ஆறு பெருகியதால்
வரவே முடியாதெனவே
இயம்பினான் உணவருந்த
வந்த சுந்தரனாரும்
அக்கேள்விதனை கேட்டாரே.
பரவையாரும் தம்மிடம்
மன்னன் சொன்னதை
மெல்லவே சொன்னாரே.
சுநதரனாருக்கு மனதிலே
ஓர் எண்ணம்
அம்மனிதரை பார்க்கவென்று.
மாறுவேடம் புனைந்த
மன்னர் சுந்தரர்
முன்னால் நின்றாரே.
இவர் தமக்கு
சன்மானம் கொடுக்க
எண்ணி யார்நீ
என்று கேட்டாரே.
அதற்கே மன்னனும்
தான் வந்த
காரியம் கூறிநின்றாரே.
கடமைப்பட்ட சுந்தரரும்
சென்று பார்த்தார்
சிவனைத் தானே
சிவனே மன்னன்
உம்மை விரும்புகிறான்
யாகம் தன்னில்
ஆகுதியை தான்
நேரவே கொடுப்பதற்கு
என்றே உரைத்தாரே.
சிவனும் அதற்கு
மறுத்து உரைக்க
நான் மன்னனுக்கு
கடமை பட்டேன்
அதுதனைத் தீர்ப்பது
உன் பொறுப்பு
என்றே சொல்ல
சிவனாரும் வருவேன்
நான் வேடம்
என்ன என்று
சொல்லேன் என்றார்.
சேரமான் தானும்
சுந்தரர் பதில்
கேட்டு தன்
நாடு திரும்பியே
யாகம் தன்னையே
முறையாக வளர்த்தாரே.
பாகம் பெறவே
சிவனாரும் புலையனாக
வேடத்தோடு வந்தாரே
யாகம் வளர்த்த
அந்தணர்கள் வெருண்டே
எழுந்தே ஓடினாரே.
சேரமான் பெருமானுக்கோ
இறைவன் தான்
என்று புரிந்ததுவே.
தான் வைத்திருந்த
ஆகுதியை அவர்
தமக்கு வழங்கினாரே.
சிவனாரும் அதனை
ஏற்று வரங்கள்
பலவும் நல்கினாரே.
தூதுவளை தூதுவளை
பேர் எடுத்த தூதுவளை.
Friday, March 30, 2012
குணத்தால் அவர்கள் மாறுபடினும்
மேலோர் கீழோர் என்றேயாவார்
அகிம்சை அன்பு அருள்
தரும் நன் நெறி
கொண்டே ஒருவர் நடப்பாராகில்
உத்தம குலம் உதித்த
அந்தணராக வைக்க படுவார்.
அவரது வாழ்வில் அந்தணர்
போன்றே கர்மாவை ஏற்பர்.
மக்கள் நலனை மதித்தே
ஒருவன் மக்களுக்காக போரது
செய்யின் அரசனாக மதிக்கபடுவர்.
அவனது வாழ்வில் மன்னர்
போன்று கர்மா நிகழும்.
இதனால் இவனும் ஷைத்திரியன்
எனவே கொள்ளல் வேண்டும்.
தனக்கு வரவு வேண்டும்
வாங்குவது விற்பது தொழிலாய்
ஏற்று நடப்பது வைசிகன்
எனவே கொள்ளல் வேண்டும்
அவனது கர்மா அதையே
ஒட்டி நடைபெறும் தானே
எவர்எவர் எத்தொழில் விரும்பினும்
அத்தொழில் செய்ய அதற்கு
ஏற்ப குணங்கள் அமையும்
குணத்தின்வழி கர்மா பெருகும்
தீயகுணங்கள் கொண்டவராயி அதற்கு
ஏற்ப கர்மா சூழும்.
குணமே தொழில் அமையும்
தொழிலது வளரும் பொழுதில்
அதுவே கர்மாவாய் சூழும்.
எவரெவர் எங்கே பிறப்பாராயினும்
குணத்திற்கு ஏற்ப கர்மாவாகி
ஜாதியாக மாறியது தானே
இதுவே கீதை பகருதுதானே.
Thursday, March 29, 2012
எத்தனை வடிவம்
அத்தனையும் கவருதே
எம்மை மலரின்
மணமே மனத்திடை
மகிழ்வினை தந்திடுதே
பச்சை மஞ்சள்
பவளச் சிவப்பு
மேக நீலம்
ஊதா வெள்ளை
அத்தனை நிறங்கள்
எத்தனையும் தனித்தனி
வடிவம் அதற்குள்ளே
நறுமணம் வேறு
அழகுறு மலரினை
பறித்தே மாலை
தொடுத்து இறைக்குச்
சூடி சொர்க்கம்
தன்னில் நாமும்
இருப்போம் மனிதர்
தமக்கு நந்தவனமே
நானில சொர்க்கம்.
Wednesday, March 28, 2012

இறைவன் மானிடரையும் படைத்தாரே.
மானிடர் வாழ்வில் பங்கினை
வகிக்கும் மண் நீர் நெருப்பு காற்று
ஆகாசம் என்பன மக்கள் தமக்கு நலமிகு ஈயவே
மானிடர் மகிழ்வாய் வாழ்ந்தாரே
தீதறு மாந்தர் செயலாலே மாநிலம்
கலங்கி தவி்த்ததுவே. இயற்கையும்
சீற்றம் கொண்டதுவே.நிலமது நடுங்கி
கடலினில் வெள்ளம்உயர்ந்து வந்ததுவே
மக்கள் வெருண்டே ஓடினரே
மாந்தர் துயரம் களைவது ஞானிகள் தம் செயலன்றோ
அறநெறி வாழ்வோர் மக்களுக்காக ஆறுதல்
கொடுப்பது கடமையன்றோ
கலியுகம் தன்னில் மக்களும் அருளுரை கேட்பது
இல்லை.இதனால் வாடும் மக்கள்
துயரை யார்தான் நீக்குவரோ
தான் தான் நன்னெறி வாழ்வாராகில்
தீதுறு தீமைகள் அணுகாது பூதலம்
தன்னில் நன்மைகள் செய்கில் மேவிய
வாழ்வு கிடைத்திடுமே.
பஞ்சபூதமும் தம்மை நுகர
மக்களுக்கு இருப்பிடம் கொடுத்திடுமே.
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012

வாழும் உயிர்கள்
யாவும் தானே
இறைவன் தன்னில்
சொரூபமே என்றே
புரிவதினால் மக்கள்
நலமுடன் வாழ்வாரே
பிரபஞ்சத்து பேறுகள்
அனைத்தும் இறைவன்
அவன் செல்வம்
அன்றோ எதுவுமே
எமக்கு உடமை
இல்லை என்றே
புரிந்து கொள்வோம்
வாழும் வாழ்க்கை
தன்னில் மற்றோர்
தமக்கு அன்பை
கொடுத்து வாழ்ந்திடுவோம்.
வாழும் ஜீவன்
அனைத்தும் எம்
ஆத்மாவென உணர்ந்திடுவோம்.
அவர் தமக்கு
நாம் செய்யும்
உதவிகள் அனைத்தும்
எமக்கு நாமே
செய்யும் செயல்களன்றோ
எமக்கது புரிந்திடுமே
ஆயின் வாழ்கையின்
தத்துவம் விளங்கிடுமே.
(மம ஆத்மா ஸர்வ பூதாத்மா)
Saturday, March 24, 2012
மும் மலங்கள்
ஆணவம் கன்மம் மாயை
மும் மலமே மானிடர் வாழ்வில்
தளை தனை வாழ்வில்
போட்டு வழி இடை
மறித்து திசை கெட
வைத்து திகிலொடு உலகினை
நோக்க வழியது வைத்து
புதிர் நடை போட்டிடுமே.
இவைகள் தடை நீங்கிடவே
சிவனடி துதித்து அருளது
பெறவே வழியது கோலி
விடுவோம் ஆகில் பாரினில்
அதனால் ஞானமே பெருக
சரணாகதியில் இருப்போம் இதனால்
மக்கள் மாண்புற வாழ்வாரே.
Friday, March 23, 2012

மாற்றி அமைக்க வேண்டும்
மாற்றி அமைக்க வேண்டும்
நமக்கு தேவையானதை நாம்
தேர்ந்தே எடுத்திடவும் வேண்டும்.
மாற்றி அமைக்க வேண்டும்
என்றும் நாம் எதிலும்
மாற்றி அமைக்க வேண்டும்
சிந்தனைகள் தான் நமக்கே
சரியானதை தேர்ந்தே எடுக்கும்
புத்தியும் நமக்கே உண்டு
தீமை தனை வென்று
நன்மை ஆக்கிடவும் வேண்டும்
பொய்தனை வென்றே தான்
வெறுப்பினை நீக்கியே நாம்
அன்பினை வளர்த்திட வேண்டும்
இதனால் ஞாலமும் சிறப்புறும்
மகிழ்வுடன் ஒழுக்கமாய்
நாமும் நல்வழி வாழ்வோமே
வாழ்க்கைப் பாதையும் சிறந்திடும் தானே
மாற்றி அமைக்க வேண்டும்
மாற்றி அமைக்க வேண்டும்.
Thursday, March 22, 2012
நடராஜா தம்மின்
திருநடன புனித நாள்
எப்போது வருமோ
எப்போது வருமோ
அந்தநாளும் வந்து
விட்டாலே என்
அப்பனை கண்ணார
கண்டே நானும்
நெக்குருகி வணங்கியே
நாவினாலே அவன்
தன்னை பாடியே
மகிழ்ந்து திருநடனம் செய்யும்
ஆனந்த கூத்தனோடு
ஆடியும் பாடியும்
வலம் தான்
வரவே வேண்டும்
பேர்உவகை கொண்டே
பெருமை தரும்
அவன் திருநாமம்
செப்பியே மகழ்ச்சிதனையே
தெரிவிக்கவும் வேண்டும்
அந்த இனிய நன்நாள்
எப்போது வரும்
எப்போது வரும்
அந்த புனித
திரு நாள்
எப்போது வரும்.
Wednesday, March 21, 2012

தாம் வேர்
ஊன்றி கிளைதனை
பரப்பி நின்றதுவே.
மரத்தின் கீழே
தென்முகமாக சிவனார்
வீற்றே இருந்தாரே.
தம் மனாக்கர்
நால்வராம் சனகர்
சனந்தனர் சனாதனர்
சனற்குமாரர் என்போர்
தமக்கு பாடம்
உரைக்கும் பாங்கினை
பாரீர்.அவரோ
குமாரபருவம் தாண்டினர்
அல்லர்.மாணாக்கர்
தாமோ வயது
முதிர்ந்த வயோதிபர்
காணீர்.சின்முத்திரை
கைதனில் பதித்து
கண்கள் மூடிய
யோக நிலையில்
புன்முறுவல் பூத்த
முகத்தோடு அவரும்
அமரந்தே இருந்தார்
மௌனமாகவே அவர்
புகட்டிய பாடதன்னை
சந்தேகம் அறவே
புரிந்து கொண்டார்
மானாக்கர் தாமே
அவர்கள் தானும்
பிரம்மாவின் மானசீக
புத்திரர் அன்றோ
மௌனமாய் படிப்பித்த
பாங்கினை கண்டு
விண்ணும் மண்ணும்
வியர்ந்து பார்த்து
கொண்டே நின்றதுவே.
Tuesday, March 20, 2012
வெண்ணிலாபோதனை என்ன சொல் வெண்ணிலவே
களைத்து போன உலகத்திற்கு வெண்ணிலவே
இரவில் சுவை தந்தாயோ வெண்ணிலவே
கடமையும் உண்டோ சொல் வெண்ணிலவே
வளர்ந்து வளர்ந்து வருவதேன் வெண்ணிலவே
மக்களை மலர வைப்பதற்கோ வெண்ணிலவே
தேய்ந்து தேய்ந்து போவதேன் வெண்ணிலவே
மக்கள் துயரினை கண்டேதானோ வெண்ணிலவே
இனி உள்ளம் வாடாதே வெண்ணிலவே
இந்த மாநிலம் வகையுறும் வெண்ணிலவே
நாமும் தான் சொல்லிடுவோம் வெண்ணிலவே
பாரினில் கவலைகள் எல்லாம் வெண்ணிலவே
பறந்தே போய் விடும் வெண்ணிலவே
Monday, March 19, 2012
யுகம் தோறும் இறை தரிசனம்
கிருதயுகம் தன்னில்
பல்நெடும் காலத்திற்கு
தவமதை செய்யவேண்டும்.
ஒரு பொழுதுண்டு
வாழ்ந்து மெல்லவே
கிழங்கினை உணவாய்
ஏற்று வருகின்ற
வேளையில் உணவினை
மாற்றி அமைத்து
பசுந்தளிர்களை உணவாய்
உண்டு தவமதை
மேற்கொள்வார்.
காலமே செல்ல
செல்ல தளிரது
இலையாகி கனியொடு
சருகு தின்பர்.
சில காலம்
சென்ற பின்னர்
காற்றையே சுவாசித்தே
பன்நெடுங்காலம்
தியானமதில் இருக்க
இறைவனும் தானே
தோன்றி கேட்கும்
வரத்தினை ஈவான்
காணீர்.திரேதயுகம்
தன்னில் நெறியது
பிழைக்கினும் மாந்தர்
மனத்தையே செம்மை
படுத்தி யாக
குண்டங்கள் அமைத்து
மந்திரம் அதனை
செப்பி வேள்விகள்
பல தான் செய்து
பல வித படையல்
படைத்து யந்திரம்
அதனை கீறி
யாகமும் செய்வார்
தானே.அதனால்
இறைவனும் தரிசனம்
கொடுத்து வரங்களை
ஈவார் அன்றோ.
துவாரகாயுகம் தன்னில்
பாவங்கள் பெருகி
இறை நினைவு
சுருங்கி விடும்.
பக்தர்கள் பலரும்
பூசையாய் மேற்கொள்வார்.
உத்தம பூசைகள்
உவந்தே செய்திடுவார்.
இறைவனும் இரங்கியே
தரிசனம் கொடுப்பார்
தானே.கலியுகம்
அது தர்மங்கள்
நலிந்த காலம்.
ஜகத்தினில் பிறந்தோரில்
பலருமே இறையை
எண்ணார்.உத்தம
குணத்தினர் சிலர்
தம் தேவைகளுக்காக
இறைவனை வணங்கி
வாழ்வார். செகத்திலே
பேராசை மிகும்.
வஞ்சங்கள் சூது
மிகும். தர்ம
எண்ணங்கள் நசிந்தே
போகும். உயரிய
கொள்கை எல்லாம்
காலத்தில் கரைந்தே
செல்லும்.இவ்விதம்
வருங்காலம் தன்னில்
இறையே சிந்தித்து
தம் செயல்
ஆற்றுவோர்கள் இறை
நாமம் தனை
செப்பிட செய்வார்
அன்றோ. அன்னவர்
தம் கவலை
போக்க நாம ஜெபம்
அதை செய்வாராகில்
நம் குரு சொன்ன
வார்த்தை போல
களி மண் முடிய
ஊசி களிமண்
கயர் நீங்கி
காந்தத்தால் இழுபடுவது
போன்று மனமும்
இறை வழி செல்லும்
வாழ்வில் நின்மதி
கிட்டும் தானே.
Saturday, March 17, 2012

எனக்கு ஓர்
இருப்பிடம் தந்தவனே
கந்தா இருப்பிடம்
தந்தவரே!.
அன்பெனும்
துன்பமே சூழாமல்
நித்தம் உன்னடி
தொழ வேண்டும்
உம்மை நான்
தரிசித்தாலே மனதில்
உவகையும் பொங்கிடுதே
அன்பெனும்
காத்தருள்வீர் கந்தா
நீரும் திருமலை வாழ்பவரே
ஏற்றருள்வீரே எம்மை
இரட்சிக்க வந்தவரே
வில்லூன்றி தனிலே நீரே
விருப்புடன் வீற்றிருந்து
ஆட்சியே செய்கின்றீரே
அன்பெனும்
பக்தர்கள் சூழ்ந்து
நித்தமும் வணங்கியே
அருளினை பெற்றிடுவார்.
செழுமையே குறையாமல்
புதுமைகள் செய்வதோடு
வேண்டிய வரம் தருவீரே
அன்பெனும்
உம் அருமையை
யார் உணர்வார்
உம் சேவடி தொழுதேனே
பெருமையாய் உம்மை
போற்றியே பாடிட
என்ன மாதவம் செய்தேனோ
அன்பெனும்
Friday, March 16, 2012

வாட்டும் ஒருவனின்
மனநிலை அதனை
புரிதல் வேண்டும்.
மற்றோர் எவர்க்கும்
தீங்கே செய்யா
நிலையில் உள்ளான்
துன்பத்தின் காரணம்
சென்ற பிறவி
கர்மா தானே.
திருத்தி எடுத்தால்
திறனே ஆகும்..
விவேகியானவன் வாழ்க்கை
பாதையை சீராக்குவான்.
சன்மார்க்க நெறியை
கை கொண்டே
நடப்பான்.இறை
சிந்தனையை பெருக்கியே
வாழ்வான்.மலரது
கொண்டு இறைவனை
பூஜித்தால் வரும்
இடையூறுகள் சற்றே
விலகும்.தினமும்
பூஜித்து வருவானாகில்
பாவ எண்ணங்கள்
விலகியே ஓடும்.
பாமாலை கொண்டு
இறைவனை வழிபடின்
துன்பம் எல்லாம்
குறையும் தானே.
Thursday, March 15, 2012

வாழ்க்கை தனிலே
தொழிலது அவசியம்
தொழிலது செய்வீர்.
எத்தொழில் செய்யினும்
சிறுமை இல்லை.
அந்தனர் தம்
தொழில் செய்திடினும்
அதனை உணர்ந்தே
செய்தல் வேண்டும்.
சாக்கடை தன்னை
தூய்மை ஆக்கினும்
அத் தொழில்
அதனை சிறப்பாய்
செய்யின் அந்த
தொழிலின் தெய்வம்
வாழும. அவரவர்
தொழிலை அவரவர்
செய்வீர் சிரத்தையோடும்
கவனத்தோடும் தொழிலை
செய்வீர் பலனை
பற்றி எதிர்பார்க்காதீர்.
இறைவன் செயலே
என்றே செய்வீர்
இதுவே மனிதன்
சுயதர்மம்.இதனை
அறிந்து செய்வீர்
ஆகில் அவனது
வாழ்க்கை அவன்
கையில் இல்லை
அதற்கு தலைவன்
இறைவன் தானே
என்றே கீதை
உரைக்கின்றதே.
( நின் அருள் வேண்டுகின்றேன்
எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே - பாரதி)
Wednesday, March 14, 2012

தன்னில் மனிதன்
போக்கே விசித்திரம்
பிறவி மகத்துவம்
அறிந்த மனிதர்
தம்மை இறைவனுக்கு
கொடுத்திடுவார்.அவரை
துன்பம் என்றும்
பற்றியது இல்லை.
தம்மை மறந்த
பக்தியில் வாழ்ந்தே
இன்பம் அதனை
கண்டிடுவார். அவரை
பாவம் என்றும்
பற்றவே மாட்டா.
உலகியல் கவலை
அவருக்கு இல்லை.
அவரின் வாழ்வை
இறைவன் பார்ப்பார்.
தந்தை பாலன்
கையை பிடித்து
அழைத்து செல்வது
போன்றே வாழ்க்கை
பாதையில் கூட்டி
செல்வார் இறைவனே
தனயன் தந்தை
கையை பிடித்து
நடப்பது உண்டு
இவைகள் இரண்டும்
சரணாகதியை குறித்திடுமே
அம்மா பூனை
குட்டியை கௌவி
தனே விரும்பிய
இடத்தில் வைப்பது
போலே ஒன்றும்
குட்டி குரங்கு
தாயினை கட்டி
பிடித்தே இருக்க
பெரிய குரங்கு
மரத்தில் தாவி
செல்வது போலே
ஒன்றும் இரண்டும்
இறைவனிடம் சரணாகதி
எனவாழ்வது தானே.
என்றே புகன்றார்
பரமஹம்சருமே அவர்
காட்டிய வழியில்
நாமும் நடப்போம்.
Tuesday, March 13, 2012
ஓங்குகையில் மண்ணுக்கு வருவார்
மாநிலம் தன்னில்
மக்கள் இடையே
பாவங்கள் கூடி
பஞ்சங்கள் பெருகி
மனிதர் தமக்குள்
சண்டை இட்டே
நீ நான்
என்று ஆணவம்
பெருகி குழப்பங்கள்
சூழ இயற்கை
நியதியால் பிரபஞ்சமது
இடையூறு உற்று
பஞ்சபூதங்களும் தன்னிலை
குன்றி எரிமலை
பூகம்பம் வெள்ளம்
மண்சரிவு எனபல
இயற்கை அழிவுகள்
தாம் பல
இனங்கள் அதற்கு
மதிப்பே கொடுக்காது
வாழ்ந்திடும் போது
அதர்மங்கள் ஒழிய
தர்மங்கள் ஓங்க
நாராயணரே நாநிலம்
காக்க பிறவி
எடுத்து வருவாரே
இதனால் பஞ்சங்கள்
நீங்கும் புண்ணியம்
பெருகும் இயற்கை
மலரும் அதனாலே
மக்கள் வாழ்வு
நலமுடன் மிளிரும்
நாராயணரே அதனை
கூறி சென்றார்
தர்மங்கள் நலிந்து
அதர்மங்கள் ஓங்குகையில்
பூதலத்திற்கு திரும்பி
வருவேன் என்றே
செப்பியே சென்றார்
போற்றி போற்றி
அவர் திருவடிக்கு
போற்றி என்றே
கூறி வணங்குவோம்.
Monday, March 12, 2012
இரவும் பகலும்
வருகுது வருகுது
நாட்கள் மாறி
வாரங்கள் ஆகுது
வாரங்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடமாகுது
வருடங்கள் பல சேர்ந்து
ஞாலத்தை மாற்றுது
நேற்று இருந்தார்
இன்று இல்லை
என்றதனை காட்டுது
இப்படி இப்படி
எத்தனை எத்தனை
வருடங்கள் சென்றாலும்
அத்தனையும் சரித்திரம்
ஆகுமடா இன்றைய
நிலையும் நாளை
சரித்திரம் ஆகுமடா.
( நாளது ஒன்றுபோல் கூடி
உயிரீனும் வாழனு உணர்வார் பெறின் - திருக்குறள் )
Saturday, March 10, 2012
மழலைமழலை சித்திரம்
போன்றவர்கள்.
அள்ளி எடுத்து
அணைக்கையில் மலர்
என மாறிடுவார்
குந்தி இருந்து
கைகொட்டி சிரித்திட்டால்
பலநூறு பொற்காசு
நிலத்தினிலே உருளுவது
போல் இருக்கும்
வாய் கூட்டி
வார்த்தைக்கு பொருள்
கொடுத்து அம்மா
என்று அழைத்திட்டாள்
குழல் ஓசை
யாழ் ஓசை
அத்தனையும் தோற்றுவிடும்
இதுதானே பிரபஞ்சம்
எம்மை எடுத்துத்தான்
ஆளுது எப்பொழுதும்
(குழலினிது யாழினிது என்பர் தம்
மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - திருக்குறள்)
Thursday, March 1, 2012
தாமுரைத்த வார்த்தை
தானிங்கு மந்திரங்களாகும் நம்
உலகில் நாம்
வார்த்தை சொல்லுகையில்
அந்நேரம் விண்ணுலகில்
உள்ள ரிஷிகள்
ஓம்தஸ்ஸத் எனக்கூறின்
அவ்வார்த்தை ஜெயம்பெறுமே
சத்தியமேத வறாமல்
வாழ்வோன் சொல்லும்
வார்த்தையும் நிச்சயம்
நடக்கும் என்பர்.
முதுமை அடைந்து
நிற்கும் பாசஉறவுகள்
வாழ்த்தும் வார்த்தையும்
நடக்கும் என்பர்.
எத்துனை யானாலும்
நல்ல வார்த்தை
சொல்லி வாழ்ந்தால்
மெத்தவும் நலமேதான்.
(வார்த்தை என்றும் அமிர்தம்தானே)




